இந்தியா

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்.

தந்தி டிவி

மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து புதிய மாநிலங்களவை துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு இன்று நடைபெற்றது.

இதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாத் களம் கண்டார். இதில் ஹரிவன்ஸ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கே. ஹரி பிரசாத்துக்கு 105 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. வெற்றி பெற்ற ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் நநேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பிடிபி உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்