இந்தியா

ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆஸி தூதருடன் ஆலோசனை

ராஜராஜன் சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்டது போல, ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மானிக்கவேல், ஆஸ்திரேலிய தூதர் சூசன் மற்றும் தூதரக அதிகாரிகள், தமிழ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு சொந்தமான சிலைகளை மீட்டது போல் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருக்கும் தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இன்று தமிழ் வளர்ச்சித் துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ள நிலையில் நேற்று இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஆஸ்திரேலியாவில் உள்ள 7 சிலைகளை ஒப்படைக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்