இந்தியா

"ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு" - ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகம்

பயணிகள் மற்றும் சரக்கு ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டில், பயணிகள் கட்டணம் 155 கோடியும், சரக்கு கட்டணம் 3 ஆயிரத்து 901 கோடியும் வருவாய் குறைந்திருப்பதாக கூறினார். எனவே, வருமானம் ஈட்டும் நோக்கில், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்தார். கட்டண உயர்வு மிகவும் கவனமாக பரிசீலனை செய்ய வேண்டிய ஒன்றும் எனவும், நீண்ட ஆலோசனைக்கு பிறகுதான் இது பற்றி முடிவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். சாலை வழியான சரக்கு போக்குவரத்தை ரயில்வேயை நோக்கி ஈர்க்கச் செய்ய வேண்டும் என்பதே தங்களது இலக்கு என வாரிய தலைவர் வி.கே.யாதவ் விளக்கம் அளித்துள்ளார். ரயில் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் இந்த திட்டத்தால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு