இந்தியா

டிரைவர்கள் இனி 'இளநீர்' குடிக்க கூடாது.. வந்த புது ரூல்ஸ்

தந்தி டிவி

ரயில் இன்ஜின் டிரைவர்கள் பணியின் போது இளநீர் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடக் கூடாது என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பணிக்கு வரும் போதும், பணி முடிந்து போகும் போதும், ரயில் இன்ஜின் டிரைவர்கள், இளநீர், பழங்கள், இருமல் மருந்துகள், குளிர் பானங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதனால் இளநீர் குடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி