இந்தியா

அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி - ராகுல்காந்தி திட்டவட்டம்

காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால், அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் ,காங்கிரஸ் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தால், அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய அவர், அங்கு நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார். ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, அண்மையில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யபட்டதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார். வெறும் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் நெருக்கடிக்கு தீர்வாகி விட முடியாது என்றும், நாட்டில் ஒரு புதிய பசுமைப்புரட்சியும் உருவாக வேண்டும் என்றும்

ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்