இந்தியா

ரபேல் விவகாரம் - வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.

தந்தி டிவி

* ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், இதனால் பிரதமர் மோடி காவலாளி அல்ல, திருடன் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதனைக் கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

* இதுதொடர்பாக ராகுல் விளக்கம் அளிக்கக்கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு இன்று மீ்ண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

* அதில், தேர்தல் பிரசாரம் உச்சநிலையில் இருக்கும்போது அவ்வாறு பேசியதாகவும், இதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோல் பேசமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்