ரபேல் விமான ஒப்பந்த வழக்கை உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை முழு மனதுடன் வரவேற்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். மக்களை தவறாக திசை திருப்பியதற்காக, காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.