Punjab | LPG Shortage | உயிரை குடித்த சிலிண்டர் | க்யூவில் நின்ற முதியவருக்கு நேர்ந்த சோகம் #punjab #LPGShortage #gascylindershortage #thanthitv சிலிண்டர் வாங்க காத்திருந்த முதியவர் மாரடைப்பால் மரணம் பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வாங்க வரிசையில் காத்திருந்த முதியவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூஷன் குமார் மிட்டல் என்ற 66 வயதான முதியவர், சிலிண்டர் தட்டுப்பாடு அச்சத்தால் கேஸ் ஏஜென்சி முன்பு சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்ததாக தெரிகிறது. களைப்பு காரணமாக காலி சிலிண்டர் மீது அமர்ந்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பூஷன் குமார் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.