இந்தியா

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மனைவியிடம் ரூ.23 லட்சம் மோசடி - ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மனைவியிடம் ஆன்லைன் மோசடி கும்பல் 23 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மனைவியிடம், ஆன்லைன் மோசடி கும்பல் 23 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் பிரனீத் கவுர். அவருக்கு, கடந்த 29 ஆம் தேதி போன் செய்த மர்ம நபர், தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும், சம்பள நிலுவைகளை வழங்க வங்கிக் கணக்கு தகவல்கள் வேண்டும் என்றும் தகவல்களை பெற்றுள்ளார். அதன்பின்னர், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 25 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர், போலீசில் புகார் அளித்ததை அடுத்து ராஞ்சியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரது கூட்டாளிகளுக்கு வலை வீசியுள்ளனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’