இந்தியா

பிரதமர் மோடியை கொல்ல சதியா...? - மாவோயிஸ்டுகள் கடிதத்தில் திடுக்கிடும் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி ? - கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்கள் வீட்டில் சோதனை

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்ட்டிரா மாநிலம் பீமா கோரோகாவுன் என்ற இடத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, புனே போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்களது வீட்டில் சோதனை நடத்திய போலீஸாருக்கு சில கடிதங்கள் கிடைத்துள்ளன. அந்தக் கடிதத்தில், ராஜீவ் கொலை போன்ற மற்றொரு நிகழ்ச்சி என்றும் சில ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான தகவல்களும் எழுதியிருந்ததாக புனே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கடிதங்கள் மற்றும் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் கிடைத்த ஆதாரங்களை போலீசார் உளவுத்துறைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமருக்கு கொலை மிரட்டல் - தமிழிசை கண்டனம்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தீவிரவாத அமைப்புகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருக்கு கொலை மிரட்டல் : நாட்டுக்கு விடப்பட்ட சவால் - பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல், நாட்டுக்கு விடப்பட்டுள்ள சவால் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இதன் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு