புல்வாமா தாக்குதலின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிஆர்பிஎஃப் ஏடிஜிபி தல்ஜித் சிங் சவுதரி, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இன்று 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மறைந்த வீரர்களுக்கு சிஆர்பிஎஃப் ஏடிஜிபி தல்ஜித் சிங் சவுதரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.