இந்தியா

"புதுச்சேரி பல்கலை.துணைவேந்தர் மீது வைத்த குற்றச்சாட்டு விவகாரம்"பல்கலைக்கழக பதிவாளர் பரபரப்பு தகவல்

தந்தி டிவி

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கும் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் குர்மீத் சிங். கடந்த 2017ம் ஆண்டுமுதல் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மையத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில், நிர்வாக ரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க குர்மீத்சிங் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப்பதிய சி.பி.ஐ.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பல்கலைக்கழக பதிவாளர், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்தின் கருத்துகளை கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார். உண்மைத்தகவல் மற்றும் ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். துணைவேந்தர் மீதும், பல்கலைக்கழக அதிகாரிகள் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர்ந்த ஆனந்த் என்பவர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?