இந்தியா

புதுச்சேரி : கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகள் - போலீசார் மீதும் தாக்குதல்...

புதுச்சேரி அருகே மளிகை கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய 2 ரவுடிகளை வில்லியனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி

புதுச்சேரி அருகே மளிகை கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய 2 ரவுடிகளை வில்லியனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 4 தினங்களுக்கு முன்பு மளிகை கடையில் ரவுடிகளான சாந்தமூர்த்தி மற்றும் அவரது அண்ணன் சம்பத் ஆகியோர் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரையும் இருவரும் தாக்கி விட்டு, தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து தலைமை காவலர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இருவரும் திண்டுக்கல்லில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததை அடுத்து, தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்