இந்தியா

நிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை : நோய் தொற்றை கண்டறிய மருத்துவர்கள் குழு அமைப்பு

நிபா வைரஸ் குறித்து புதுச்சேரி மாநிலத்தில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
நிபா வைரஸ் குறித்து புதுச்சேரி மாநிலத்தில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளும், சிறப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், கடலூரைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் ரத்த மாதிரிகள் ,புனேவில் உள்ள மத்திய அரசின் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே, நிபா வைரஸ் தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று கூறினார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்