இந்தியா

கோஷ்டி மோதலின் போது வெடித்த வன்முறை - இளைஞர்கள் 2 பேர் அடித்துக் கொலை

புதுச்சேரியில் கோஷ்டி மோதலின் போது 2 இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரியை அடுத்த பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருண். இவருக்கும் வழுதாவூரை சேர்ந்த முரளி என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கும் மேலாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன் முரளி உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், புதுநகர் பகுதிக்கு சென்ற போது, அங்கிருந்த அருண் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் பிரச்சினை முற்றவே, இரு தரப்பும் கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கி கொண்டதில், முரளி மற்றும் அவரது நண்பர் சந்துரு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரின் சடலங்களையும் மீட்ட போலீசார், 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில் தான் கொலை சம்பவத்திற்கு முன்பாக ரவுடிகள் கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வரும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ரவுடி அருள்தாஸ் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் புதுச்சேரி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரவுடி கொல்லப்பட்ட நிலையில் அவரின் இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கலந்து கொண்டனர். ஊரடங்கை மீறி இவர்கள் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு நாட்களிலும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் அதிகம் நடப்பதாக கூறும் அவர்கள், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்...

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு