சிறுவர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக சிறுவன் ஒருவன் இங்குள்ள சீர்திருத்தப் பள்ளியில் படித்து வருகிறான். இது அவனது உறவினர்கள் தரப்பில் யாருக்கும் தெரியாது.அங்கு ஆய்வுக்கு சென்ற கிரண்பேடி, சிறுவர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால், தமது மகன் சீர்திருத்த பள்ளியில் இருப்பது, உறவினர்களுக்கு தெரிந்துவிட்டது என்றும், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக சிறுவனின் பெற்றோர் புகார் கூறியதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.