இந்தியா

"வளர்ச்சி வேண்டும் என்றால் என்னை பற்றி விமர்சிக்காதீர்கள்" - புதுவை முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில்

புதுச்சேரி, முன்னேற்றம் அடைய வேண்டும் என விரும்பினால் தன்னைப் பற்றி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சிக்கக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி முதலமைச்சர் நராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், கிரண்பேடி தன்னிச்சையாக பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றத் தேவையில்லை என நாராயணசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், நாராயணசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக, வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ள கிரண்பேடி, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து, எதிர்மறையான கருத்துக்களை கூறுவதால், புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்புள்ள முதலமைச்சராக இருக்கும் நாராயணசாமிக்கு, புதுச்சேரியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், அவர் ஆளுநரின் அதிகாரம் பற்றி விமர்சனம் செய்திருக்க கூடாது எனவும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்