இந்தியா

திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்த சுயேச்சை எம்.எல்.ஏ.. பரபரப்பான புதுவை | Thanthitv

தந்தி டிவி

புதுச்சேரியில் குடும்ப அட்டை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி பாதிக்கப்பட்ட மக்கள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்க சில அதிகரிகள் லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சம் கொடுக்காவிட்டால் அலைகழிப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

இதையடுத்து சிவப்பு நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனை திரும்ப வழங்க கோரி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பெருள் வழங்கல் துறை அலுவலகத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அனைவரும்கலைந்து சென்றனர்.

Omni Bus | ``சிறைபிடிப்பு’’ - அடாவடி ஆம்னி பேருந்துகளுக்கு இடியை இறக்கிய அரசு

``தவெக அரசு மீது அதிருப்தி’’ - ஓரே அடியாக அடித்த கம்யூனிஸ்டுகள்.. தவெக பக்கமிருந்து வந்த விளக்கம்

NTK Seeman Support | ``ஆதரவு’’ - அரசியல் களத்தை புரட்டிப்போட்ட சீமான்

CPM Shanmugam ``இது துரோகம்.. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது?’’

Byelection | 4 கட்சியையும் எதிர்த்து `கம்யூ.,’ நிறுத்திய வேட்பாளர்கள்.. அவர்களின் `மாஸ் பின்னணி’