இந்தியா

கான்ட்ராக்டருக்கு பணம் வழங்காததால் புதுச்சேரி பொறியாளர் அலுவலகம் ஜப்தி

தந்தி டிவி

புதுச்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு 15 கோடி ரூபாய் பாக்கி வைத்த‌தால், தலைமை பொறியாளர் அலுவலகத்தில் ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு உப்பனார் வாய்க்கால் மீது மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி, முடிக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனிடையே, அரசு வழங்க வேண்டிய பாக்கி தொகையை வழங்கக்கோரி, கட்டுமான நிறுவனம் வழக்கு தொடர்ந்த‌து. இந்த வழக்கில் வட்டியுடன் 15 கோடியே 39 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த தொகை வழங்கப்படாத‌தால், நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் அலுவலக வாசலில், ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்