புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி
அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் வெளியிட்டார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 700 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு 490 கோடி ரூபாய் வழங்கவும் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.