இந்தியா

"23ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்" | Puducherry Assembly

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் 23ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..

தந்தி டிவி

புதுச்சேரி 15 வது சட்டபேரவையின் இரண்டாவது கூட்டம் வரும் 23ந்தேதி காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக சபாநாயகர் செல்வம் அறிவிப்பு.

புதுச்சேரி சட்டபேரவை கூடவுள்ள நிலையில் சபாநாயகர் செல்வம் பேரவை மண்டபத்தை ஆய்வு செய்தார்.

புதுச்சேரி சட்டசபையின் கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால் பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி ரூ.9 ஆயிரத்து 900 கோடிக்கான முழுமையான பட்ஜெட்டை ஆகஸ்ட்டில் தாக்கல் செய்தார். சட்டசபை கூடி வரும் 26ந் தேதியுடன் 6 மாதம் நிறைவடைய உள்ளது. எனவே 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டசபையை கூட்ட வேண்டும் என விதி உள்ளதால் வரும் 23ந் தேதி புதன்கிழமை புதுச்சேரி சட்டசபையில் குளிர்கால கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என தெரிகிறது. புதுச்சேரி சட்டசபையில் அடுத்தமாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவும் உள்ளது. இதனிடையே சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் சபாநாயகர் செல்வர், சட்டப்பேரவை செயலர் முனிசாமியுடன் ஆய்வு செய்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி