இந்தியா

புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயிலின் ஆடித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்