இந்தியா

புதுச்சேரியில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா - சிறுவனின் தந்தைக்கு ஏற்கனவே பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், ஜிப்மர் மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து திரும்பிய பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போன்று, வில்லியனூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.


CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்