கடலூர் மாவட்டம் திருமணிகுழியை சேர்ந்த குணசேகரன் என்ற நபரே தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரியில் மதுபான கடைகள் விலை உயர்த்தி திறக்கப்பட்ட பிறகு இவர், பழனிச்சாமி வைத்திருக்கும் விலையே நாராயணசாமி வைத்துள்ளார் என்று கடுமையாக பேசினார். இதற்காக தம்மை கைது செய்யட்டும் என்று கூறிய குணசேகரன், ஜெயில் என்று ஒன்று இருந்தால், பெயில் என்று ஒன்று இருக்கும் என வசனம் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் குணசேகரன், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.