Maharashtra Bribe Issue | லஞ்சம் வாங்கிய அதிகாரி வாயில் காலாவதியான பிஸ்கட்டை திணித்த பொதுமக்கள் - மகாராஷ்டிராவில் பரபரப்பு சம்பவம் மகாராஷ்டிராவில் காலாவதியான பிஸ்கட்டை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியின் வாயில் திணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் சம்பாஜிநகர், வைஜாப்பூர் பகுதி காலாவதியான பிஸ்கட்டுகளை சாப்பிட்ட 2 வயது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, காலாவதியான பிட்கெட்டை பறிமுதல் செய்ய மறுத்ததாக சுகாதாரத்துறை அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள், அவரது வாயில் காலாவதியான பிஸ்கட்டை கட்டாயப்படுத்தி திணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.