இந்தியா

``ரிலையன்ஸுக்கு சலுகை..'' - சிக்கலில் பி.டி.உஷா... அதிர்ச்சி கொடுத்த தீர்மானம்

தந்தி டிவி

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா மீது

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

VOVT

2022 டிசம்பரில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக

முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார் என பி.டி.உஷா மீது உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன்

இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் காரணமாக சங்கத்துக்கு 24 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை பி.டி.உஷா மறுத்துள்ளார். இந்நிலையில் இந்திய

ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ள சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் இத்தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணை செயலாளர் கல்யாண் தன்னை ஒலிம்பிக்

சங்கத்தின் பொறுப்பு தலைமை செயல் அதிகாரி என்று கூறிக்கொண்டு 25ஆம் தேதி சிறப்பு பொதுக்குழுவை கூட்ட நடவடிக்கை எடுத்து இருப்பது விதிகளுக்கு முரணானது என பி.டி.உஷா கூறியுள்ளார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்