இந்தியா

விடிய விடிய ஆப்பிள் ஆப்ரேஷன்..வீட்டுக்குள் விபச்சாரவேட்டை-காட்டுக்குள் சிக்கிய பெண்கள், புரோக்கர்கள்

தந்தி டிவி

காரைக்காலில் விடிய விடிய நடைபெற்ற ஆப்ரேசன் ஆப்பிள் மூலம், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டை பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த‌ தகவலை அடுத்து, ஆப்பிரேசன் ஆப்பிள் என பெயரில் சோதனை நடைபெற்றது. நெடுங்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வீடுகளில் தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவர்களை கண்ட‌தும், பாலியல் தொழில் கும்பல் வீட்டை விட்டு வெளியேறி அருகிலிருந்த கருவேல காட்டுக்குள் புகுந்தனர். அவர்களை பிடிக்க 8 மணி நேரம் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் தொழில் நடத்திய பெண் மற்றும் புரோக்கர்கள் 2 பேரை கைது செய்த தனிப்படையினர், கார், பைக்குகள், 8 ஆயிரம் ரூபாய் பணம், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்