இந்தியா

"மோடியின் நண்பருக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒப்பந்தம்" - டுவிட்டர் வலைப்பதிவில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ரபெல் போர் விமானங்களை பராமரிக்க பிரதமர் மோடியின் நண்பருக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளார்.

தந்தி டிவி

ரபெல் போர் விமானங்களை பராமரிக்க பிரதமர் மோடியின் நண்பருக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபெல் போர் விமானங்களை, வரும் 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக மக்கள் பணத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம், பிரதமரின் நண்பருக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு குறிப்பு ஒன்றையும் ராகுல்காந்தி இணைத்துள்ளார். இந்த ஆதாரத்தில் உண்மை இருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர் சந்திப்பில் இதனை மறுக்கக்கூடும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு

Union Budget 2026 | தமிழகத்திற்கு வரும் முக்கிய மையம்.... மேசையை தட்டி வாழ்த்திய பிரதமர்

Union Budget 2026 | Tamilnadu Scheme | தமிழகத்திற்கு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

Nirmala Sitharaman | "இதுதான் இலக்கு..." - நிர்மலா சீதாராமன் சொல்ல சொல்ல ராகுல் கொடுத்த REACTION