இந்தியா

தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய கடிதம்

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய கடிதம்

தந்தி டிவி

உங்ககிட்ட சொல்ல விரும்புவது இதுவே கடைசி என தொடங்கி, என்னால ஜெயிக்க முடியல என்றும், என் மேல வச்சிருந்த நம்பிக்கையை காப்பாத்த முடியல என்றும் தெரிவித்துள்ளார்.

என் ஆசை, நீங்க எல்லோர் முன்னிலையிலும் தலைநிமிர்ந்து வாழனும், ஆனால் என்னால் அதை செய்ய முடியலை என தெரிவித்துள்ளார்.

என் குடும்பம் நீங்க எல்லோரும் எனக்கு கிடைச்ச வரம் அப்பா என்றும், ஆனால் நான் உங்களுக்கு கிடைச்ச சாபம் என நினைக்கிறேன் எனவும் கடிதத்தில் கூறியுள்ளார்.

எனக்கு தோல்வியை தாங்குகிற சக்தியில்லை என்றும், எல்லோருடைய நம்பிக்கையையும் இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு கோழைத்தனமாக தெரியலாம் எனவும், நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கையை அழிச்சிட்டு வாழுறதை விட இந்த முடிவு சரியானது எனவும் கூறியுள்ளார்.

எல்லோரையும் விட்டுட்டு போகனும்னு நினைக்கும் போது ரொம்ப வலிக்குது என்றும், அதைவிட அதிகமான வலியை தோல்வி தந்து விட்டதாகவும் கடிதத்தில் மாணவி பிரதீபா தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்