இந்தியா

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படுகிறது.

தந்தி டிவி

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படுகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் வண்ணமிகு விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரணாப் முகர்ஜிக்கு விருதை வழங்குகிறார். பாரத ரத்னா விருது பெறும் ஐந்தாவது முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. பிரணாப்முகர்ஜி தவிர, இறப்புக்கு பின்னான பாரத ரத்னா விருது சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாமிய மொழி பாடகர் பூபேன் ஹசாரிகாவுக்கும் வழங்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்