மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மொழி வாய்ப்புகள் பட்டியலில் இருந்து தமிழ் உள்ளிட்ட 17 மாநில மொழிகள் நீக்கப்பட்ட விவகாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், நடைமுறையில் உள்ளபடி தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.