இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த பிரக்ஞானந்தா... பிரதமர் சொன்ன அந்த ஒரு வார்த்தை

தந்தி டிவி

உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, கடந்த வாரம் தனது பெற்றோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ள பிரக்ஞானந்தா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமர் தன்னுடைய பயிற்சிகள் குறித்து கேட்டு அறிந்ததாகவும், அவரை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதோடு, அவருடன் கலந்து உரையாடியதை ரசித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி தனக்கு சில பரிந்துரைகளை வழங்கியதாக தெரிவித்த பிரக்யானந்தா, அவருடைய வாழ்த்துக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். அத்துடன், இந்தியாவில் வலிமையான வீரர்கள் இருப்பதாகவும் கடினமாக பணியாற்றி போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதே நமது முதன்மை இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை