இந்தியா

முதுநிலை மருத்துவ நீட் தேர்வு ஒத்திவைப்பு.. தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

முதுநிலை மருத்துவ நீட் தேர்வு ஒத்திவைப்பு.. தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

தந்தி டிவி

முதுநிலை மருத்துவ நீட் தேர்வு ஒத்திவைப்பு.. தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பரவி வருவதால், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டிவிட்டர் பதிவில்,குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வருகிற 18 ஆம் தேதி நடைபெற விருந்த, மருத்துவ முதுநிலை படிப்பிற்கான, நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாகவும், மருத்துவ மாணவர்களின் நலனை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்