புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். இதன்மூலம் அனைத்து தரப்பினருக்கும் பொங்கல் பரிசு வழங்கிட, முதலமைச்சர் நாராயணசாமி கோரியிருந்த அனுமதியை அவர் நிராகரித்துள்ளார். உயர்நீதி மன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய ஆளுநர் கிரண் பேடி, தமிழகத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என விளக்கம் அளித்துள்ளார்.