புதுச்சேரியில் 3 மாத இலவச அரிசிக்கு பதிலாக
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேபோல் ஒன்றரை லட்சம் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த , 54 கோடி ரூபாய் ஒதுக்கி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி அனுமதி அளித்தார்.
இதற்கிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக தலா 200 ரூபாயை வங்கி கணக்கில் வழங்கவும், இதற்காக , 3.49 கோடி ரூபாயை ஒதுக்கவும் ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.