இந்தியா

Police | Funeral | காதலித்த மகள் - உயிரோடு இருக்கும்போதே இறுதிச்சடங்கு செய்த பெற்றோர்

காதலித்த மகள் - உயிரோடு இருக்கும்போதே இறுதிச்சடங்கு செய்த பெற்றோர்

thanthitv

Police | Funeral | காதலித்த மகள் - உயிரோடு இருக்கும்போதே இறுதிச்சடங்கு செய்த பெற்றோர் #Funeral #UttarPradesh #Police #ViralVideo உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த இளம்பெண்ணுக்கு, அவரது பெற்றோர் உயிரோடு இருக்கும்போதே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேத்வாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு சென்ற அவரை, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மீட்டு அழைத்து வந்தனர். அப்போது, தான் மேஜர் என்றும், தனது விருப்பப்படி காதலனுடன் வாழ விரும்புவதாகவும் பெண் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், மகளுடனான உறவை துண்டிப்பதாக கூறிவிட்டு, வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். பின்னர் அவரது புகைப்படத்தை வைத்து உருவ பொம்மை ஒன்றை தயாரித்து, பாடை கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்று, அதற்கு இறுதிச்சடங்கு செய்துள்ளனர். மேலும், 13-ஆம் நாள் சடங்கான நடத்தவும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING || தாராபுரத்தில் நாளை மாநாடுதான் போல..! அமைச்சர் KAS கொடுத்த Elevation

BREAKING || சென்னையின் முக்கிய சாலையில் பிரமாண்ட பள்ளம்... ஒரு லாரியே உள்ள போயிடும் போல

BREAKING || சொத்து குவிப்பு வழக்கால் திமுக எம்பிக்கு வந்த சிக்கல் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

BREAKING || சென்னையில் பெற்றோர் கண்முன்னே மகனை துடிதுடிக்க கொ*ற பயங்கரம் - ரவுடியை தூக்கிய போலீஸ்

TVK | CM Vijay | Fix செய்த CM விஜய்.. கூட்டணிகளுக்கு பறந்த மெசேஜ்.. பரபரக்கும் அரசியல் களம்