இந்தியா

ஒன்றுமறியா குழந்தை... சிறுவனை ஏவி... இரு பெண் பேய்கள் நிகழ்த்திய கொடூரம் ... ஈரக்குலையை அறுத்த பயங்கரம்

தந்தி டிவி

கடனை திருப்பி கேட்டு வற்புறுத்தியதால், கடன் கொடுத்தவரின் 6 வயது மகளை கடத்தி இரு பெண்கள் கொன்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திராவின் சித்தூரை சேர்ந்தவர் அசன்துல்லா. இவரின் ஆறு வயது மகளான அஸ்வீயா திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புகாரின் அடிப்படையில் 12 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஏரிக்கால்வாயில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்பவருக்கு அசன்துல்லா கடனாக பணம் கொடுத்திருந்ததும், நீண்ட நாள்களானதால் பணத்தை திருப்பி கேட்டு வற்புறுத்தியதும் தெரியவந்தது. இதனால், ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா, சிறுவன் ஒருவன் மூலம் அசன்துல்லாவின் மகளை தன் வீட்டிற்கு நாசுக்காக வரவழைத்து, தன் தாயாருடன் சேர்ந்து சாப்பாடு போட்டு பின் மூச்சு திறணடித்து கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், ரேஷ்மா, அவரின் தாய் ஹசீனா மற்றும் சிறுவன் ஒருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்