இந்தியா

முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்தவர் கைது, சுற்றிவளைத்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார்

ஆந்திராவில், முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள பன்லகுடாவை சேர்ந்த சுவர்ணா அதே பகுதியை சேர்ந்த சாய்கிரணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணமான பிறகு தொடர்ந்து சண்டை இருந்து வந்த நிலையில், விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், சுவர்ணாவையும், அவரது தாயாரையும் தாக்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்ட சாய்கிரண் சமீபத்தில் விடுதலையாகி வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த சாய் கிரண், சுவர்ணாவுக்கு போன் செய்து அவரை கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுவர்ணா அளித்த புகாரின் பேரில், அவரது வீட்டின் அருகே போலீசார் காத்திருந்துள்ளனர். அப்போது கத்தியுடன் சுவர்ணாவை கொலை செய்ய வந்த சாய்கிரணை சுற்றிவளைத்து பிடித்து போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்