இந்தியா

"எல்லை பாதுகாப்பில் காங். செய்யாததை செய்தது பாஜக" - பிரதமர் பெருமிதம்

தந்தி டிவி

எல்லை பாதுகாப்பில் காங்கிரஸை போல் பலவீனமாக இல்லாமல், அதி நவீன உள்கட்டமைப்புகளை பா.ஜ.க. உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சியில் குண்டு துளைக்காத ஜாக்கெட் இல்லாததால், எதிரிகள் தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் ஆளானதாக குற்றம் சாட்டினார். அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வழங்கியது பா.ஜ.க. தான் என்றும் காங்கிரஸை போல் பலவீனமாக இல்லாமல், எல்லைகளில் நவீன உள்கட்டமைப்புகளை பா.ஜ.க. உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் எதிர்ப்பதோடு, இந்து மதத்தின் சக்தியை அச்சுறுத்துவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

🔴LIVE : NDA Alliance | EPS | சசிகலா, ஓபிஎஸ்ஸின் முடிவு - அதிரடி திருப்பமான EPS, அமித்ஷா மீட்டிங்..

ADMK | BJP | Jayalalitha ஜெயலலிதாவின் நட்சத்திர பிறந்தநாளான இன்று - தமிழகம் அறிய அறிவிக்கும் ஈபிஎஸ்?

Iran War | Trump Pressmeet | போர் முற்றிய சூழலில் டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Edappadi Palanisamy ADMK | Delhi Meeting | டெல்லியில் ஈபிஎஸ் அமித்ஷாவுடன் சந்திப்பு

Breaking | Nellai Incident | நெல்லையில் டீ கடையில் நின்ற 4 பேருக்கு சரமாரி வெ*ட்டு