* எதுவும் நடக்காது, முடியாது என பலர் கூறிய போதிலும் உறுதியாக இருந்து இந்தியாவை படேல் ஒருங்கிணைத்ததாகவும் மோடி தெரிவித்தார். படேல் சிலையை திறந்து வைக்கும் கவுரவம் கிடைத்ததில் பெருமைப்படுவதாகவும், அனைத்து இந்தியர்களுக்குமான வரலாற்று தருணம், இது எனவும் குறிப்பிட்டடார்.
* தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, சிலை அமைக்கும் முயற்சி தொடங்கியதாகவும், படேல் சிலையை அமைப்பதற்கு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் விவசாய கருவிகளின் இரும்பை தந்து ஆதரவளித்ததாகவும் கூறினார்.