இந்தியா

சொந்த கட்சி தலைவர் பெயரை தெரியாதவர் ராகுல் - பிரதமர் மோடி

சொந்த கட்சியின் தலைவர் பெயரை கூட தெரியாத நிலையில் ராகுல் காந்தி இருப்பதாக, பிரதமர் மோடி கேள்வி விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

* சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அங்குள்ள சுமர்புர் பகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, கடந்த 70 ஆண்டுகளாக சமூகத்தில் பல்வேறு பிரிவினைகளை காங்கிரஸ் கட்சி உருவாக்கி இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

* சோனியா மற்றும் ராகுல் காந்தியின், வருமான வரி கணக்கு விபரங்களை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை சுட்டிக் காட்டிய மோடி, மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிக்க தொடங்கி உள்ளதால் ஜாமீனில் இருக்கும் சோனியாவும், ராகுலும் கோபத்தில் இருப்பதாகவும் மோடி விமர்சித்தார்.

* ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபல காங்கிரஸ் தலைவர் 'கும்பராம்' பெயரை 'கும்பகர்ணன்' என ராகுல் காந்தி பேசியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தனது சொந்த கட்சியின் தலைவர் பெயரை கூட தெரியாதவர் பதவிக்கு வந்தால் ஆட்சி எப்படி இருக்கும்? எனவும் கேள்வி எழுப்பினார்.

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா