இந்தியா

"முப்படைகளை நவீனப்படுத்துவதற்கு முன்னுரிமை" - கார்கில் வெற்றி தின நிகழ்வில் பிரதமர் மோடி தகவல்

முப்படைகளை நவீனப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கார்கில் போரின் 20-வது ஆண்டு வெற்றிக் கொண்டாட்டம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போது போர் விண்ணிற்கு எட்டியுள்ளது என்றும், அதே நேரத்தில் இணையதளத்திலும் போராட வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக நாம் முப்படைகளையும் நவீனமாக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாகவும் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து வகையான முடிவுகளையும் தமது அரசு எடுத்துள்ளதாக பட்டியலிட்டார். கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, முன்பு போரில் தோற்றவர்கள், தற்போது மறைமுகமாக தீவிரவாதத்துக்கு உதவி செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக தீவிரவாதம் இருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கார்கில் வெற்றி நாட்டின் வலிமை, பொறுமை, ஒழுக்கம், புனிதத்தன்மை மற்றும் ஒவ்வொரு இந்தியனின் எதிர்ப்பார்ப்புக்கும் கிடைத்த வெற்றி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்