இந்தியா

"நாட்டில் வலம் வரும் வாரிசு அரசியல்வாதிகள்" - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு

அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் பலர், டாக்டர் அம்பேக்கர் பெயரை பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்

தந்தி டிவி

அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் பலர், டாக்டர் அம்பேக்கர் பெயரை பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கபீர் குருவின் 500 - வது நினைவு நாள் விழாவில் பேசிய அவர், வாரிசு அரசியல் வாதிகள் பலர், நாட்டில் வலம் வருவதாக விமர்சித்தார். இவர்கள், ஏழைகளை காக்க வந்த கடவுளா? என கேள்வி எழுப்பிய பிரதமர், ஏழைகளை ஏமாற்றும் அரசியல் இனி ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றார். மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஏழைகளுக்காகவும் உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்