இந்தியா

PM Modi | மெகா பிளானோடு இறங்கும் பிரதமர் மோடி... பல முக்கிய முடிவுகள்

PM Modi | மெகா பிளானோடு இறங்கும் பிரதமர் மோடி... பல முக்கிய முடிவுகள்

thanthitv

மெகா பிளானோடு இறங்கும் பிரதமர் மோடி... பல முக்கிய முடிவுகள் அடுத்த மாதம் பிரதமர் மோடி அமீரகம் பயணம் அடுத்த மாதம் பிரதமர் மோடி ஐரோப்பாவிற்குச் செல்லும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு குறுகிய கால பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் மற்றும் செங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து இந்தப் பயணத்தின் போது விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய மோதல்களால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ​மேலும், இந்த சந்திப்பின் போது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்