இந்தியா

உடற்பயிற்சியின் போது மோடி கையில் இருந்த மர்ம பொருள் என்ன?

கோவளத்தில் நடைபயிற்சி சென்ற போது கையில் வைத்திருந்த மர்ம பொருள் என்ன என்பது குறித்து டிவிட்டரில் பிரதமர் மோடி விளக்கம் கொடுத்துள்ளார்.

தந்தி டிவி

சீன அதிபருடனான சந்திப்பு தொடர்பாக மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, தமது கையில் சின்ன கைத்தடி போன்ற பொருளை வைத்து பிரதமர் மோடி உருட்டிக் கொண்டு இருந்தார். பிரதமர் மோடியின் கையில் இருந்த அந்த பொருள் என்னவென்று அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் அதிகரித்தது. இதையடுத்து, இது குறித்து பிரதமர் மோடியிடம் ட்விட்டரில் பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இது குறித்து பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், தமது கையில் இருந்த பொருள் "அக்குபிரஷர் ரோலர்" என்றும், அதை தாம் அடிக்கடி பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அது பலவகையில் உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அக்குபிரஷர் கருவியை பயன்படுத்துவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதனால் அக்குபிரஷர் ரோலர் கருவிக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை