இந்தியா

பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் செலுத்தியதால் டெங்கு நோயாளி மரணம் - உபியில் அதிர்ச்சி

தந்தி டிவி

பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் செலுத்தப்பட்ட டெங்கு நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ளேட்லெட்டுகள் அதிகம் தேவைப்படும் நிலையில், பிரயக்ராஜ் உள்ள குளோபல் மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிரதீப் பாண்டேவுக்கு ப்ளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் செலுத்தப்பட்டுள்ளது.

ப்ளாஸ்மாவும் சாத்துக்குடி ஜூசும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும் என்பதால் மாற்றி செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால் பிரதீப் உயிரிழந்த நிலையில், சாத்துக்குடி ஜூஸ் கொடுத்த போலியான ரத்த வங்கியில் பணியாற்றியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் ப்ரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்