கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து, புதிதாக பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தி குணப்படுத்தும் ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தின் முயற்சிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே, ரத்த தானத்திற்கான வயதை குறைக்கும் வகையில், விதிமுறைகளை தளர்த்தக்கோரி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.