இந்தியா

"எதை மறைக்கிறார் பினராயி விஜயன்?" - வெடித்த பூகம்பம்

தந்தி டிவி

தங்க கடத்தல் சர்ச்சை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் எதையோ மறைப்பதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கேரளாவில் குறிப்பிட்ட சமுதாயத்தினர்தான் அதிக அளவில் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு கேரள முதல்வர் மறுப்பு தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட நாளிதழும் வருத்தம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் சொல்லாத கருத்தை வெளியிட்டிருந்தால், அந்த நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவில் தேச விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறும் முதல்வர் பினராயி, அதை தன்னிடம் கூறாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

தங்க கடத்தல் குறித்து கேள்வி எழுப்பினால் வேறு எதையோ கூறி முதல்வர் திசை திருப்புவதாக குற்றம்சாட்டிய ஆளுநர் ஆரிப் கான்,

இதுதொடர்பாக குடியரசு தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஆளுநர் ஆரிப் கான் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்