கேரளாவில் முதிர்ந்த அறிஞராக போற்றப்படும் சித்ரன் நம்பூதிரி தன்னை சந்திக்க வந்த முதல்வர் பினராயி விஜயனுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி அளித்தார். திருச்சூர் பகுதியை சேர்ந்த சித்ரன் நம்பூதிரி, தாம் நிறுவிய உயர்நிலை பள்ளியை ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டு அரசுக்கு வழங்கி கல்வி வளர்ச்சிக்கு உதவியவர் என்ற பெருமையை பெற்றவராக அறியப்படுகிறார். இந்நிலையில் நூறு வயதை எட்டிய சித்ரன் நம்பூதிரியை அவரது வீட்டிற்கு சென்று முதல்வர் பினராயி விஜயன் சந்தித்தார். பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதியாக வழங்கி சித்ரன் நம்பூதிரி வழியனுப்பி வைத்தார்.