புதுச்சேரியில், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை 28 சதவீதமாகவும், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை 21.80 சதவீதமாகவும் உயர்த்தி கடந்த மே 27-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசணைக்கு தடை விதிக்க கோரி, காரைக்காலை சேர்ந்த தேவமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விலையை குறைக்க மட்டும் தான் அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், விலை ஏற்றப்பட்டது தவறு என்றும் சுட்டிக் காட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மதிப்பு கூட்டு வரி சட்டப்பிரிவு 31-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வரியை குறைக்க மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளதால், வரியை உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.